சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் வைத்து, உடலில் உள்ள காயங்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகள் என் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சலக்கு சங்கரை சிறையில் அடித்திருக்கிறார்கள்.. வலது கையை உடைத்திருக்கிறார்கள் என அவரது வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைத்தார். இந்த நிலையில் மத்திய சிறையில் தாக்கப்பட்டதாக சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் சட்டப்பணிகள் குழுவினர் சிறைக்குள் சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்; சிறைக்குள் சவுக்கு சங்கர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டக் பணிகள் குழு ஆய்வுக்கு பின் அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் வைத்தும், உடலில் உள்ள காயங்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவுக்கான அறிக்கை இன்று காலை கிடைத்து விடும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென மனு அளித்திருந்தோம். அதற்கான உத்தரவு கிடைத்துள்ளது. எதற்காக போராடினமோ..? அதற்கு வெற்றி கிடைத்துள்ளது. சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவு சிறைத்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் நீதிபதி முன்பு சவுக்கு சங்கருக்கு கோவை சிறையில் நடந்த சம்பவம் அனைத்தும் வாக்குமூலமாக மதுரையில் கொடுத்துள்ளார். சவுக்கு சங்கர் உடலில் உள்ள காயங்கள் குறித்தான தகவல்கள் சட்டக் பணிகள் குழு அறிக்கையில் உள்ளது. அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் தகவல்களும், அதற்கு மருத்துவர் பதில் அளிக்காத தகவல்களும் அந்த அறிக்கையில் உள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறினார்.