fbpx

’என் கணவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார்’..!! ’அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது’..!! நாஞ்சில் விஜயன் மனைவியால் பரபரப்பு..!!

என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்துக் கொண்டார் என கணவர் நாஞ்சில் விஜயன் மீது அவருடைய மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன். இவர் லாக்டவுன் நேரத்தில் யூடியூப் சேனலை தொடங்கினார். அந்த சேனலுக்கு யூடியூபர் சூர்யா தேவியை பேட்டி எடுத்த போது வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் திருமணம் குறித்து தகாத வார்த்தைகளால் பேசியிருந்தார். இதையடுத்து, வனிதா விஜயகுமார் சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு 10 மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இவர் தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நாஞ்சில் விஜயனும் மரியாவும் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் மரியா, ”இவர் என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது எங்களிடம் அவர் வயதையே சொல்லவில்லை.

ஆனால் இவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும். என்னை பெண் பார்க்க வந்த போது கூட இவர் தலை, மீசை, எல்லாம் வெள்ளையாகவே இருந்தது. திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் இவருக்கு எண்ணெய் தேய்த்து விட்டேன். அப்போதுதான் சாயம் வெளுத்தது. தலை பூரா வெள்ளை முடிதான்” என்று தனது கணவர் பற்றி நகைச்சுவையாக கூறியிருந்தார். அதற்கு நாஞ்சில், ”நான் ஏமாற்றி எல்லாம் திருமணம் செய்யவில்லை. என்னோட வயசையும் நான் மறைக்கவில்லை. இந்த வெள்ளை முடிக்கு மட்டும்தான் டை அடித்தேன்” என்றார்.

English Summary

His wife has made sensational allegations against her husband Nanjil Vijayan that he cheated me and got married.

Chella

Next Post

வயநாடு நிலச்சரிவு..!! இதுவரை 370 பேர் உயிரிழப்பு..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Sun Aug 4 , 2024
It has been officially announced that 370 people have died in the Wayanad landslide so far.

You May Like