நயன்தாரா –விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாய் யார் என்பதற்கு பதில் இப்போது கசிந்து வருகின்றது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தாய்லாந்து என நாடு நாடாக ஹனிமூன் சென்றனர். விரைவில் குழந்தை பிறக்கப்போவதாக சஸ்பென்ஸ் எல்லாம் வைத்திருந்தார் நயன்தாரா . இரு தினங்களுக்கு முன்பு நாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகிவிட்டோம் என்பதை டுவிட்டரில் பகிர்ந்தனர்.இதையடுத்து அந்த தகவல் வைரலானது.
4 மாதங்களில் இரண்டு குழந்தைகள் எப்படி பிறந்தது என்ற சர்ச்சை கிளம்பிய நிலையில் தாங்கள் இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டோம் என்ற செய்தியை தெரிவித்தார்கள்.அந்த சர்ச்சை முடிவதற்குள் இருவரும் சட்டத்தை பின்பற்றாமல் குழந்தையை பெற்றெடுத்ததாக அடுத்த சர்ச்சை கிளம்பியது.
இதனிடையே உண்மையிலேயே வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்ததா? அப்படி எனில் யார் அந்த வாடகைத்தாய் என்ற கேள்வி எழுந்தது. தற்போது இதற்கான விடை கிடைத்திருக்கின்றது. கேரளாவில் நயன்தாராவின் உறவினர் ஒருவர்தான் வாடகைத்தாயாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே தாங்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகின்றோம் என பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிய பின்னர்தான் இதற்கான நடைமுறைகளை பின்பற்றினார்களாம். திருமணம் ஆன கையோடு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராகி உள்ளனர்.