fbpx

சென்னையில் ஜொலிக்கும் இளஞ்சிவப்பு ஆட்டோ..!! பெண்களே விண்ணப்பிக்க ரெடியா..!! நவ.23ஆம் தேதியே கடைசி..!!

தமிழ்நாடு அரசு, பெண்கள் நலன் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது.

இந்நிலையில், முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும். பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இந்த திட்டம் வழிவகை செய்யும்.

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்…

* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை.

* இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

* 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* சென்னையில் குடியிருக்க வேண்டும்.

* ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும். சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு, 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை – 600 001 என்ற முகவரிக்கு நவ.23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு..!! சிக்குமா முக்கிய ஆவணங்கள்..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!!

English Summary

On the orders of the Chief Minister, Tamil Nadu Government is going to introduce ‘Pink Autos’ as a new initiative.

Chella

Next Post

காசாவில் காயமடைந்த தங்கையை தோலில் சுமந்து செல்லும் சிறுமி..!! - நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ

Wed Oct 23 , 2024
Amid the war in Gaza, a heartbreaking video of a girl carrying her injured younger sister through the streets in search of medical care has surfaced.

You May Like