fbpx

ஷாக்!… சிக்கன் ‘ஷவர்மா’ சாப்பிட்ட 19 வயது இளைஞர் மரணம்!… 2 பேர் கைது!

உணவு பிரியர்களே உஷார்..!! நாய் தின்ற சவர்மாவை விற்பனை செய்த ஓட்டல்..!! வீடியோ வைரலானதால் சீல்..!!

‘Shawarma’: மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கடந்த 4ம் தேதி பிரதமேஷ் போக்சே 19 வயது இளைஞர், அருகில் உள்ள ஸ்டால் ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கடும் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக KEM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், தொடர்ந்து உடல்நிலையில் சரியில்லாமல் இருந்ததையடுத்து, கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, ஷவர்மா மாதிரியை விசாரணைக்கு அனுப்பி, கடைக்காரர்கள் ஆனந்த் காம்ப்ளே மற்றும் முகமது அகமது ரைசா ஷேக் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது ஐபிசி 304 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. தொடரும் மரணங்கள் ஷவர்மா பிரியர்களிடம் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: சர்ச்சை கருத்து!… முதல்வர் ஸ்டாலினுக்கு துணிச்சல் உள்ளதா?… பிரதமர் மோடி சவால்!

Kokila

Next Post

தனது 2 ஐபோன்களை உடைத்து எறிந்த ஜாஃபர் சாதிக்...! இயக்குநர் அமீர் கொடுத்த வாக்குமூலம்...!

Thu May 9 , 2024
ஜாபர் சாதிக் தனது 2 ஐபோன்களையும் உடைத்து நேப்பியர் பாலம் அருகே வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி வந்த புகாரில் ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.கடந்த 3 ஆண்டுகளில் உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் 3,500 கிலோ போதைப் பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருளை […]

You May Like