fbpx

ஷாக்!. இந்தியாவில் பரவிய அரியவகை நரம்பியல் நோய்!. 73 பேர் பாதிப்பு!. அறிகுறிகள் இதோ!

Guillain barre syndrome: புனேவில் அரிய வகை நரம்பியல் பாதிப்பான குய்லின்-பார் சிண்ட்ரோம் (guillain barre syndrome) என்னும் நோய் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலும் 10 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம். அவர்களில் 14 பேர் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புனேவில் வெள்ளிக்கிழமை குய்லின்-பார் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) சந்தேகத்திற்குரிய ஆறு வழக்குகள் கண்டறியப்பட்ட நிலையில் , நகரத்தில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 73 ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குய்லின்-பார் சிண்ட்ரோம் என்றால் என்ன, இதன் அறிகுறிகள் காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

குய்லின்-பார் சிண்ட்ரோம் guillain barre syndrome என்னும் நோயை கண்டறிந்தவர் Mr. Georges Guillain and Jean Alexandre Barre அவருடைய பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. மருத்துவத்தில் இது GBS- post inflammatory demyelinating polyradiculoneuropathy என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக GBS என்று சொல்லப்படும் இந்த நோய் அரிய வகை நரம்புக்கோளாறு. உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நரம்புகளைத் தாக்குகிறது. இது பலவீனம், உணர்வின்மை அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் பொதுவாக ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதால் GBS க்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

அவசர நிலை நரம்பு கோளாறு என்று இதை சொல்லலாம். எப்படி பக்கவாதம் என்பது உடனடி சிகிச்சை வேண்டிய நிலையோ அப்படிதான் இதற்கும் உடனடி சிகிச்சை அவசியம். ஆனால் இது அரிய வகை நோய் என்பதால் மக்களுக்கு பெரும்பாலும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பெரு நாட்டில் வைரஸ் தொற்று, பாக்டீரியல் தொற்றால் இந்த குய்லின்-பார் சிண்ட்ரோம் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனாலேயே அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தியிருக்கலாம்.

குய்லின்-பார் சிண்ட்ரோம் உள்ள பெரும்பாலான மக்கள் ஜிபிஎஸ் அறிகுறிகள் தோன்றுவதற்கு குறைந்தது ஆறு வாரங்களுக்கு முன்பே நோய்த்தொற்றின் அறிகுறிகளை அனுபவித்திருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்றுகளில் ஏதேனும் சுவாச நோய் அல்லது இரைப்பை குடல் தொற்று ஆகியவை அடங்கும். ஜிபிஎஸ்ஸின் அறிகுறிகளில் பலவீனம் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

GBS மற்ற அறிகுறிகள் பின்வருமாறு: பார்வையில் சிரமம், விழுங்குவதில் சிரமம், பேசுவது அல்லது மெல்லுதல், கைகள் மற்றும் கால்களில் முட்கள் போன்ற வலி, இரவில் கடுமையான வலி, அசாதாரண இதய துடிப்பு அல்லது இரத்த அழுத்தம் மற்றும் செரிமானம் அல்லது சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டில் உள்ள சிக்கல்கள்.

Readmore: சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம்!. ராணுவ விமானங்களில் எல்லைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்!. வெள்ளை மாளிகை!

English Summary

Shock!. A rare neurological disease has spread in India!. 73 people are affected!. Here are the symptoms!

Kokila

Next Post

டெல்லியில் உலகளாவிய திருக்குறள் மாநாடு...! மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு..‌!

Sat Jan 25 , 2025
Global Thirukural Conference to be held in Delhi soon

You May Like