fbpx

சென்னையில் மீண்டும் அதிர்ச்சி..!! தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! அதுவும் ஓவியா உதயநிதி பெயரில்..?

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் வித்யா மந்திர், பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடித்து விடும் என்றும் இ-மெயில் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மொஹரம் பண்டிகை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், சோதனைக்கு பிறகு அது புரளி என தெரியவந்துள்ளது. மின்னஞ்சலில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓவியா உதயநிதி என்ற பெயரிலான மின்னஞ்சல் முகவரி மூலமாக அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : ரூ.70 லட்சம் வருமானம் தரும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்..!! எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா..?

English Summary

Bomb threats have been made to private schools in Chennai.

Chella

Next Post

’காலையில் வாக்கிங் போகவே பயமா இருக்கு’..!! ’அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பே இல்லை’..!! செல்லூர் ராஜூ ஒரே போடு..!!

Wed Jul 17 , 2024
"You are going to see Edappadi Palaniswami's glory in the assembly elections of 2026," said former minister Sellur Raju.

You May Like