fbpx

நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி..!! பட்டியலின சிறுவனை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

நெல்லையில் காரில் மோதும் படியாக சென்றவர்களை தட்டிக்கேட்ட சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் சின்னத்துரை – சுகந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் மகனும், பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் என இரண்டு மகன்கள் உள்ளனர். சின்னத்துரை கொத்தனராகவும், சுகந்தி ஹோட்டலிலும் வேலை பார்த்து வருகிறார்.

இரண்டாவது மகன் நேற்று மதியம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்புவதற்காக சாலையில் நடந்து வரும்போது, திருமலை கொழுந்து புரம் நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று சிறுவன் மீது மோதும்படி சென்றுள்ளது. இதனால் வேகமாக சென்ற காரை நோக்கி ஏன் வேகமாக இப்படி மோதும்படி செல்கிறீர்கள்? என சிறுவன் காரில் சென்றவர்களை நோக்கி கேட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்து காரில் இருந்தவர்கள் சிறுவனுடன் தகராறு செய்தனர்.

பின்னர், உடன் இருந்த மற்றொரு நபர் இருவரையும் விலக்கி வைத்து வீட்டிற்கு செல்லுமாறு சிறுவனை அனுப்பி வைத்துள்ளார். மதிய வேளையில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து மாலையில் மீண்டும் திருமலை கொழுந்து புரத்தில் இருந்து காரில் கும்பலுடன் வந்து வீட்டில் தனியாக இருந்த சிறுவனை அரிவாள், பீர் பாட்டிலால் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து நொறுக்கி உள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்து இருந்த சிறுவனை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவன். அவனை தாக்கியது மாற்று வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே, சாதி வன்மத்தோடு மாணவனை அந்த கும்பல் தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் சுகந்தி கூறுகையில், “நாங்கள் கூலி வேலை செய்கிறோம். தினமும் நாங்கள் வேலைக்கு சென்றால் தான் குடும்பம் நடத்த முடியும். எந்த முன் பகையும் இல்லாமல் ஒரே நாளில் நடந்த பிரச்னைக்காக எனது மகனை வீடு புகுந்து இப்படி வெட்டியுள்ளனர். 17 வயதில் எனது மகனுக்கு இப்படி ஒரு வன்கொடுமை நடக்க வேண்டுமா? நாங்கள் எப்படி உயிர் வாழ்வது? எனது மகனைப் போல் வேறு யாருக்கும் இனி இது போன்று நடக்கக்கூடாது” என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

Read More : ”எல்லா தேர்தல்களிலும் அடி வாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு”.? மன்னிப்பு கேள்..!! சீமானுக்கு எதிராக தவெக போஸ்டர்..!!

English Summary

The incident in Nellai where a boy who knocked down passers-by by hitting a car, broke into a house and attacked him with a sickle and a beer bottle has created a lot of excitement in the area.

Chella

Next Post

அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை பேர் பணி நீக்கமா.. ஐடி நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?

Tue Nov 5 , 2024
According to reports, 3,080 people were laid off in October alone. According to the information released from the year 2023, this is also mentioned as the lowest level.

You May Like