fbpx

வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு.. வட்டி விகிதம் உயர்வு..

வீட்டுக்கடனுக்கான வட்டி விதித்தை உயர்த்தி உள்ளதாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அறிவித்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்ட வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன.. இந்நிலையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ( LIC Housing Finance ) நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.50% உயர்த்தி இதற்கு முன் ஆரம்ப வட்டி விகிதம் 7.50% ஆக இருந்த நிலையில், தற்போது, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8%ஆக அதிகரித்துள்ளது..

எனினும் ஒவ்வொரு நபரின் சிபில் ஸ்கோருக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். உதாரணமாக, சிபில் ஸ்கோர் (CIBIL Score) 800க்கு மேல் இருப்பவர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு 8% வட்டி விதிக்கப்படுகிறது.. அதே நேரத்தில் 750க்கும் 799க்கும் இடையே சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு 8.05% வட்டி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்குவோருக்கு 8.40% வட்டி விதிக்கப்படும் என்றும் .

சிபில் ஸ்கோர் 700க்கும் 749க்கும் இடையே இருப்பவர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு 8.20% வட்டி விகிதமும், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினால் 8.40% வட்டியும் விதிக்கப்படும்… கடந்த 2 மாதங்களில் 2வது முறையாக வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

டி20 போட்டிகள்..!! பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனை..!!

Mon Sep 26 , 2022
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை வென்றதை அடுத்து பாகிஸ்தான் அணியின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் க்ரீன் மற்றும் இறுதியில் […]
டி20 போட்டிகள்..!! பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனை..!!

You May Like