Air pollution: டெல்லியின் காற்றை தினமும் சுவாசிப்பது 40 சிகரெட்களை புகைப்பதற்கு சமம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் காற்றின் மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையிலும் முற்றிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 1 வரையில் பட்டாசுகள் தயாரிக்க மற்றும் வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நேற்று டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. அதன்படி காற்று மாசுபாடு அளவு 331 என்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. குறிப்பாக டெல்லியில் உள்ள ஆனந்த் விகாரில் 441 ஆகவும், ஜகாங்கிரி பூரில் 401 ஆகவும் இருக்கிறது. ஏற்கனவே டெல்லியில் நேற்று 8 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமானது. மேலும் தற்போது காற்றின் மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். டெல்லியின் காற்றில் உள்ள மாசுகளின் அளவு மிக அதிகமாக இருப்பதால், டெல்லியின் காற்றை தினமும் சுவாசிப்பது 40 சிகரெட்களை புகைப்பதற்கு சமம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்லியில் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மாசுபடுத்துகிறது. இது தவிர, குப்பைகளை எரிக்கும் பழக்கம் டெல்லியில் வழக்கமாக உள்ளது, இதன் காரணமாக தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காற்றில் செல்கின்றன.
மாசுபாட்டைக் குறைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இப்பிரச்னையை சமாளிக்க அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசுபாட்டின் அபாயங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களைத் தூண்டுவதன் மூலமும் மட்டுமே மாசுபாட்டைக் குறைக்க முடியும்.
Readmore: சென்னை மக்களே..!! இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்..!! மோசமான நிலைமை..!!