fbpx

ஷாக்!… சென்னை குடிநீர் பாதுகாப்பு இல்லை!… ஆபத்தான வேதிப்பொருட்கள் மிக அதிகம்!…

Chennai: சென்னையை அடுத்த புழல்(செங்குன்றம்) ஏரி, சோழவரம் ஏரி, திருவள்ளூர் அருகிலுள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், திருப்பெரும்புதூர் அருகிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவையும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியும் சென்னைக்குக் குடிநீர் தரும் நீர்நிலைகள் ஆகும்.

தற்போது சென்னையில் IIT-M செய்த ஆய்வு முடிவுகள், “Occurrence of Forever chemicals in Chennai Waters, India” என்ற தலைப்பில், “Environmental Sciences Europe Journal-March,2024” வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளில் சென்னை குடிநீரில், ‘என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்களின்’ அளவு, அமெரிக்க சூழல் பாதுகாப்புக் கழகம்(EPA) பரிந்துரைத்த அளவை விட 19,400 மடங்கு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஈரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும், Perfluoroalkyl substances+ Polyfluoroalkyl substances என்ற வேதிப்பொருட்களை அளப்பதை கூட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேகொள்ளாத நிலையே இந்தியாவில் உள்ளது.

மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் Polyfluoroalkyl substances-PFAS-பெருங்குடி குப்பைக் கிடங்கு மற்றும் அருகில் உள்ள நிலத்தடி நீர், அடையார் ஆறு, பக்கிங்காம் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் ஏரியிலிருந்து வீட்டு உபயோகத்திற்கு விநியோகிக்கப்படும் குடிநீரில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.

ஆபத்தான வேதிப்பொருட்கள்’ உள்ள நீரை தொடர்ந்து குடித்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்: ஈரல் பாதிப்பு, எடை குறைவாக குழந்தைகள் பிறத்தல், ஹார்மோன் பிரச்னைகள், மலட்டுத் தன்மை, நோய் எதிர்ப்புசக்தி குறைதல், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பெருங்குடி குப்பைக் கிடங்கிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில், நிலத்தடி நீரில் PFASன் அளவு மிக அதிகமாக இருந்தது.

Perfluorobutane sulfonateன் அளவு 136.27 நானோகிராம்/லிட்டர் என்ற அளவில் உள்ளது. நீரில் அதன் அளவு 2,000 நானோகிராம்/லிட்டர் என்ற அளவில் இருக்கலாம் என இருந்தாலும், இத்தகைய ஆபத்தான வேதிப்பொருட்கள் குடிநீரில் இருப்பது கவலை அளிக்கிறது. அடையார் ஆறு, பக்கிங்காம் கால்வாயிலும்,‘என்றென்றும் நிலைத்திருக்கும் ஆபத்தான வேதிப்பொருட்களின்’ அளவு அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கழிவுநீர் உரிய சிகிச்சையின்றி அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கலப்பதே இதற்கு முக்கிய காரணம். செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்தடையும் நீரில் Perfluorooctanoic Acid (PFOA)ன் அளவு 8.97 ng/லிட்டர் என குறைவாகவும், ஏரியிலிருந்து சிகிச்சைக்குப்பின் சென்னையிலுள்ள 40 லட்சம் பேருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் நீரில் PFOAன் அளவு 20.4 நானோகிராம்/லிட்டர் என மிக அதிகமாகவும் உள்ளது. அதற்கு காரணம் PFAS உருவாகக் காரணமாக இருக்கும் வேதிப்பொருட்கள் (Precursors) சிகிச்சையின்போது தூண்டப்பட்டு, அதிகளவில் PFAS உற்பத்தியாவதாலே, மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

Readmore: திருமணத்திற்கு முன்பு லிவிங்கில் இருக்க ஆசை! விருப்பம் தெரிவித்த பாரதி கண்ணம்மா ரோஷினி!

Kokila

Next Post

அண்ணாமலைக்கு தொடர் சிக்கல்!... தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் அதிரடி!

Tue Apr 30 , 2024
Annamalai: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். இந்துகளின் பண்டிகையான தீபாவளியை ஒழிக்க வெளிநாட்டு நிதி உதவி பெறும் கிறஸ்தவ மிஷனரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதை […]

You May Like