fbpx

ஷாக்!. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!.

Cylinder: வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.16 அதிகரித்து ரூ. 1,980.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.16 அதிகரித்து ரூ. 1,980.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டரின் விலை கடந்த ஜூலை மாதம் முதலே மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Readmore: பிரேக் பிடிக்கவில்லையா?. கவலை வேண்டாம்!. காரை நிறுத்த இந்த வழிகளை பின்பற்றுங்கள்!.

English Summary

Shock!. Cylinder price hike for commercial use!.

Kokila

Next Post

எதுக்கு இந்த இரட்டை வேடம் ஏன்..? பிள்ளையை கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டும் திமுக..! அன்புமணி காட்டம்

Sun Dec 1 , 2024
Why is the Tamil Nadu government playing a double role in the Aritapatti tungsten mining issue?

You May Like