fbpx

அதிர்ச்சி..! தற்காலிக ஆசிரியர் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி தெரியுமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 2022 – 2023ஆம் கல்வியாண்டில், ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூனில் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வு முடிவு  வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை | computer teacher exam - hindutamil.in

தற்காலிக ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும், தகுதியான நபர்கள் ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி மாலை 5 மணி வரையில், அந்தந்த பகுதி மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படாத நிலையில், தற்போது தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதை எதிர்த்து ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 551 பேர் தான், பாஸ் : தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ  அறிவிப்பு | Dinamalar Tamil News

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தரப்பில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு கருத்துகளையும் கேட்ட நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முதலில் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, இந்த வழக்கை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Chella

Next Post

தலைமை மருத்துவரை வீடியோ காலில் தொடர்புகொண்ட நீதிபதி..! மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி..!

Sat Jul 9 , 2022
மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி 24 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சிறுமியை ஏமாற்றி ஒருவர் கர்ப்பம் ஆக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது […]

You May Like