fbpx

ஷாக்!… எதிர்கால எச்சரிக்கை விடுக்கும் கொரோனா!… 2 அலைகள் அபாயம்!… மீண்டும் உலகை பாதிக்குமா?

Corona wave: இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு கொரோனா வைரஸ் அலை வருவதற்கு வாய்ப்புள்ளதால், இதற்காக பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டில் கேபி.2 (kp.2) என்ற கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதனால் இத்தகைய கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதே வைரஸ் நமதுநாட்டில் மேற்குவங்கம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருகிறது. இந்த வைரஸ், தமிழ்நாட்டில் இதுவரை பரவவில்லை.

மேலும் இந்த வைரஸ், ஒமைக்ரானின் மற்றொரு வகைதான். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டாலும் நோயாளி, விரைவில் குணமடைவார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் இந்த வகை வைரஸ் பாதிப்புகளை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு தமிழ்நாட்டில் ஏற்கனவே சுகாதாரத்துறையிடம் உள்ளது என்று கூறினார்.

Readmore: என் கிட்ட இருக்கும் பென்டிரைவ் வெளியே விட்டால், கர்நாடக அரசு கவிழ்ந்து விடும்…! குமாரசாமி பரபரப்பு…!

Kokila

Next Post

’30 வினாடிகளில் தாயை அவமானப்படுத்திய பிரதமர் மோடி’..!! ’இமயமலையில் அமர்ந்து தியானம் செய்யுங்க’..!! விளாசிய காயத்ரி ரகுராம்..!!

Thu May 23 , 2024
Gayatri Raghuram criticizes PM Modi for humiliating mother in 30 seconds

You May Like