fbpx

சென்னையில் அதிர்ச்சி..!! மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து..!! பயணிகளின் நிலைமை..?

சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் (அக்டோபர் 24) காலை திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில் அண்ணனூரில் இருந்து ஆவடிக்கு மின்சார ரயில் வந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த ரயிலில் 4 பெட்டிகள் தடம் புரண்டது.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக, மற்ற மின்சார ரயில்களின் பயணம், வந்தே பாரத் உள்ளிட்ட ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Chella

Next Post

தாமிரத் தயாரிப்புக்கு' தரக் கட்டுப்பாட்டு...! மீறினால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்...! மத்திய அரசு உத்தரவு....!

Tue Oct 24 , 2023
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இந்தியத் தர நிர்ணய நிறுவனம் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து தரக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவிப்பதற்கான முக்கிய தயாரிப்புகளை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, அடையாளம் கண்டு வருகிறது. இது 318 தயாரிப்புத் தரங்களை உள்ளடக்கிய 60-க்கும் அதிகமான புதிய தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின் மேம்பாட்டுக்கு வழிவகுத்தது. இது தாமிரத் தயாரிப்புகளின் 9 தரங்களை உள்ளடக்கியது.தாமிரம் மற்றும் அதன் உலோகக் கலவைகள் மின் […]

You May Like