கோவையில் 17 வயது சிறுமி ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 3 நாட்களாக காணவில்லை என அவரது பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை வலைவீசி தேடி வந்தனர். ஆனால், புகாரளித்த மறுநாளே மாயமான சிறுமி, வீடு திரும்பி உள்ளார். இதையடுத்து, சிறுமியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, சிறுமி கூறிய தகவலை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமி கூறுகையில், தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். சமூக வலைத்தளம் மூலம் தனக்குப் பழக்கமான 7 இளைஞர்கள் குனியமுத்தூர் பகுதிக்கு தன்னை வரவழைத்ததாகவும், அங்கு அறை எடுத்து தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உக்கடம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 7 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 17 வயது சிறுமி ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ’இதுல எதுக்கு அரசியல் பண்றீங்க’.!! ’உங்களுக்கு இதே வேலையா போச்சு’..!! திமுக அரசை கடுமையாக சாடிய சசிகலா