fbpx

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!… ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை கடித்து குதறிய எலிகள்!…

தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியின் கை மற்றும் கால்களை எலிகள் கடித்து குதறிய சம்பவம் அரங்கேற்யுள்ளது.

தெலுங்கானா மாநிலம் காமரெட்டியில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெற்று வந்த 43 வயது நோயாளியின் வலது கை விரல்கள் மற்றும் குதிகால் பின்புறம் எலி கடித்துள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, முன்னதாக அந்த நோயாளிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, பின்னர் அவர் காமரெட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஒரு வாரத்திற்கு முன்பு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் மருத்துவமனையையும் நோயாளியையும் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு மெமோ வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, ஐசியூவில் உள்ள டயாலிசிஸ் பிரிவு புதுப்பிக்கப்பட்டு வருவதால் எலிகள் உள்ளே நுழைய முடிந்தது, இதற்காக மருத்துவமனையில் சில அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகளின் கூற்றுப்படி, நோயாளிகளின் உதவியாளர்கள் படுக்கைக்கு அருகில் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உணவை முறையற்ற முறையில் போடுவதால் எலிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மற்ற நோயாளிகளின் உதவியாளர்களும் மருத்துவமனையில் எலிகளின் தொல்லை குறித்து புகார் தெரிவித்தனர். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், நோயாளிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Kokila

Next Post

வறட்டு இருமலை போக்கும் எளிய வழி.! இதை கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க.!?

Mon Feb 12 , 2024
பொதுவாக நமக்கு சாதாரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவை விட சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் அதிகமாக அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சரியாக சில நாட்கள் ஆகும். குறிப்பாக வறட்டு இருமலால் பல தொல்லைகள் ஏற்படும். இதை வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து எளிதாகவும், உடனடியாகவும் சரி செய்யலாம். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம். 1. சளி காய்ச்சலின் போது […]

You May Like