cancer drug: டெல்லியில் அதிக மதிப்புள்ள போலி புற்றுநோய்க்கான மருந்துகளை விற்பனை செய்த 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் மோதி நகர் பகுதியில் உள்ள டிஎல்எஃப் கேபிடல் கிரீன்ஸில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் போலி புற்றுநோய்க்கான மருந்துகளை கும்பல் ஒன்று விற்பனை செய்துவந்துள்ளது. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலையடுத்து, டெல்லி அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை, அதிகாரிகளுடன் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த கும்பல் பிடிபட்டது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனைகளில் இருந்து புற்றுநோய் மருந்துகளின் லேபிள்கள் கொண்ட காலி குப்பிகளை சேகரித்து, அதில் போலியான பொருட்களை நிரப்பி புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் டெல்லி மற்றும் குருகிராம் மருத்துவமனை ஊழியர்களும் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 4 கோடி மதிப்புள்ள ஒப்டிடா, கீட்ரூடா, டெக்ஸ்ட்ரோஸ், ஃப்ளூகோனசோல் பிராண்டுகளின் 140 போலி மருந்து குப்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட விபில் ஜெயின் என்பவர் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, இந்த ஜெயின் என்பவர், மோதி நகரில் இரண்டு EWS பிளாட்களை எடுத்து, போலியான புற்றுநோய் மருந்தை (குப்பிகளை) நிரப்ப அதே குடியிருப்பைப் பயன்படுத்தினார். சூரஜ் ஷாட் இந்த குப்பிகளை நிரப்புதல் மற்றும் பேக்கேஜிங் செய்வதை நிர்வகித்து வந்ததாகவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
Readmore: மருத்துவர்களுக்கு இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!… மருந்து நிறுவனங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு!