fbpx

பெண்களே உஷார்!… நிர்வாணமாக காட்டும் ஏஐ தளங்கள்!… ஆய்வில் அதிர்ச்சி!

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகைகள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் சாதனையாளர்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலரின் முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் நிர்வாண அல்லது ஆபாச வீடியோவுடன் டீப் ஃபேக் எனப்பும் தொழில்நுட்பத்தின் மூலமால மார்பிங் செய்து உண்மையான வீடியோபோல பகிர்ந்து வருவது பெருகி வருகிறது. வன்மம், பாலியல் ரீதியான பார்வை, பணம் கேட்டு மிரட்டுவது போன்ற காரணங்களை கடந்து சாதாரணமானவர்களும் இதை தற்போது செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். சாதாரண இன்ஸ்டாகிராம், பேஸ்புக் லைக்கிற்காகவும், சமூக வலைதள பக்கத்தை பிரபலமடைய செய்வதற்காகவும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்தநிலையில், பெண்களின் ஆடைகளை அகற்றி, ஆபாசப் படங்களைத் தரும் ஏஐ இணையதளங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதாக பகீர் ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஏஐ குறித்த ஆய்வுகள் நடந்து வந்தாலும் கூட சாட் ஜிபிடியின் வெற்றி அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது.
சாட் ஜிபிடியின் வெற்றி ஏஐ குறித்த ஆய்வுகளுக்கு நிதியையும் அள்ளிக் கொடுத்தது. இதனால் ஏஐ மாடல்களை வைத்துப் பல புது புது ஆய்வுகளும் நடந்து வந்தன. இதனால் ஏகப்பட்ட நன்மைகளும் கிடைத்து.

ஏஐ மாடல்: அதேநேரம் ஏஐ மாடல்கள் மூலம் சமூகத்திற்கு நன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இதனால் சில மோசமான விளைவுகளும் கூட ஏற்படவே செய்கிறது. இதனால் வேலையின்மை அதிகரிக்கும் என்ற புகார்களும் இருக்கிறது. அதையும் தாண்டி பெண்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் போலியான படங்கள் அல்லது வீடியோவையும் இதன் மூலம் உருவாக்க முடிகிறது. ராஷ்மிகா மநந்னா தொடங்கி பலரது போலி வீடியோக்கள் இப்படி இணையத்தில் பரவின.

இதற்கிடையே இது தொடர்பாக இப்போது ஒரு பகீர் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதாவது ஏஐ டூல்களில் இப்போது பெண்களை ஆடைகள் இல்லாமல் காட்டும் ஏஐ செயலிகள் மற்றும் இணையதளங்கள் இப்போது வேகமாகப் பிரபலமடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 2.4 கோடி பேர் இதுபோல பெண்களை ஆபாசமாகக் காட்டும் தளங்களுக்குச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல்களை கிராஃபிகா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆபாசமாகக் காட்டும் தளங்கள்: பெண்களை ஆபாசமாகக் காட்டும் பல தளங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும் போது பெண்களை ஆபாசமாகக் காட்டும் தளங்களின் லிங்குகள் எக்ஸ் மற்றும் ரெட்டிட் தளங்களில் 2,400% அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஏஐ மூலம் பெண்களின் படத்தை நிர்வாணமாக உருவாக்க முடிகிறது. இதில் பல தளங்கள் பெண்கள் படத்தை மட்டுமே நிர்வாணமாகக் காட்டுகிறது. இதில் இருந்தே இவர்கள் நோக்கம் எவ்வளவு மோசமானது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் கையில் எந்த பெண்ணின் படம் கிடைத்தாலும் அதை வைத்து போலியாக ஆபாசப் படம் உருவாக்க முடியும் என்ற சூழல் உருவாகிறது. இது இணையத்தையே அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தான ஒன்றாக மாற்றுகிறது.

இதனால் ஏஐ மாடல்கள் தரும் படங்களை உடனடியாக நம்மால் போலி படமா இல்லை ஒர்ஜினலா என்பதைக் கண்டறிய முடிவதில்லை. இது சமூகத்தில் மிகப் பெரிய அழிவைத் தரலாம் என்பதால் இந்த விவகாரத்தில் உலக நாடுகள் மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற தளங்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்று கூட இல்லையாம். கூகுளில் குறிப்பிட்ட வார்த்தையைப் போட்டுத் தேடினாலே இதுபோன்ற தளங்கள் வருகிறது.

இதுபோன்ற மோசமான தளங்களை அணுகுவது அந்தளவுக்கு ஈஸியான ஒன்றாக இருக்கிறது. இந்த தளங்கள் இதுபோன்ற போலி ஆபாசப் படங்களை ரெடி செய்ய மாதத்திற்கு 10 டாலர் அதாவது 880 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஏஐ மாடலை அடிப்படையாக வைத்து இயங்கும் இந்த போலி தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

Kokila

Next Post

’மார்ச் மாதம் கைக்கு வந்துரும்’..!! புதிய வாக்காளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தேர்தல் ஆணையம்..!!

Tue Dec 12 , 2023
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு அறிவித்துள்ளார். தற்போதும் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் பரிசீலிக்கப்படும். தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய […]

You May Like