Army Vehicle Accident: இந்திய-சீனா எல்லையில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் பலி, 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்திய-சீனா எல்லையில் காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த 19 வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அசாமின் டின்சுகியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் ஹவில்தார் நகாத் சிங், நாயக் முகேஷ் குமார் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 4 பேர் மே சிகிச்சைக்காக ஜோர்ஹாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Readmore: வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!. அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ஒப்பந்தமான முதல் இந்திய வீராங்கனை!