fbpx

ஷாக் நியூஸ்.. மேலும் சில ஆவின் பொருட்களின் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி இந்த உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.. அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டது.. இதே போல் 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டது..

இந்நிலையில் மேலும் சில ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.. 8 இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.. அதன்படி குலாப் ஜாமூன் 125 கிராம் 5 ரூபாய் உயர்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

மைசூர்பா அரை கிலோ 230 ரூபாயில் இருந்து 270 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.80லிருந்து ரூ.100ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.. பால்கோவா 100 கிராம் 47 என்று விற்கப்பட்ட நிலையில் அது 55 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.. 100 கிராம் டேட்ஸ் கோவாவின் விலை ரூ.50-ல் இருந்து ரூ.60-ஆக உயர்ந்துள்ளது.. 500 கிராம் ஸ்வீட்லெஸ் கோவாவின் விலை ரூ.260-ல் இருந்து ரூ.300ஆக உயர்ந்துள்ளது..

Maha

Next Post

ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர்..! அதிர்ச்சி கொடுத்த இந்திய வீராங்கனைகள்..!

Fri Sep 16 , 2022
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக இந்திய வீராங்கனைகள் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். சென்னை நுங்கம்பாக்கம் SDAT மைதானத்தில் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கர்மன் தண்டி, ருதுஜா போஷாலே ஜோடி, கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி ஜோடியுடன் மோதியது. முதல் சுற்றில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய தாப்ரோஸ்கி, லூசியா ஸ்டேபனி […]
ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர்..! அதிர்ச்சி கொடுத்த இந்திய வீராங்கனைகள்..!

You May Like