fbpx

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்!!! இந்த மாவட்டங்களில் வரும் 9ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!

மிலாடி நபி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், விருதுநகர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 9ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் FL-1/FL-2/FL-3/ FL-3A, FL-3AA மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003ஆம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor(Licence and Permit) Rules, 1981-ன்படி, நபிகள் நாயகம் பிறந்த தினமான அக்டோபர் 9 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு வரும் 9ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளார். ஏற்கனேவே வரும் 9 ஆம் தேதி இறைதூதர் முகமது நபி அவர்களின் பிறந்த தினமான மிலாடி நபியையொட்டி சென்னை மற்றும் மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... VDA மீண்டும் உயர்வு...! எவ்வளவு தெரியுமா...?

Fri Oct 7 , 2022
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை 28 சதவீதமாக உயர்த்த இருந்து வருகிறது. சமிபத்தில் ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி மற்றும் DA நிலுவைத் தொகை கிடைத்துள்ளது. தற்போது மத்திய அரசின் மற்ற ஊழியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 28 அன்று, மத்திய அரசு தசரா போனஸ் அறிவித்தது மற்றும் ஜூலை 1, […]

You May Like