ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்துவோருக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அந்த வங்கி வெளியிட்டுள்ளது.
இன்றைய நவீன காலத்தில் பலரும் அவசரக்கால கடனை பெறுவதற்கு மட்டுமல்லாமல், பல முக்கிய நோக்கங்களுக்காகவும் கிரெடிட் கார்டு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, ஆன்லைன் ஷாப்பிங் முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை அனைத்திற்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகையும் செலுத்த தொடங்கிவிட்டனர். இதற்டையே, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தால் கிரெடிட் கார்டு மூலமாக வாடகை செலுத்துவதற்கு வங்கி தற்போது ஒரு சதவீதத்தை கட்டணமாக வசூலிக்கும் என்பதை கட்டாயம் வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

இந்த புதிய விதி இன்று அக்டோபர் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஐசிஐசிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி cred, redgiraffe, mygate, Paytm , magicbricks போன்ற தளங்களில் வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.