Emergency landing: நியூ யார்க்கில் ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா 152 எனும் சிறிய விமானம் தரையிறங்கிய சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள செடார் கடற்கரையில் ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா 152 எனும் சிறிய விமானம் என்ஜின் கோளாறு காரணமாக தரையிறங்கியது. விமானி மற்றும் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கடற்கரையில் தரையிறங்கியதால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கியதாக விமானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று செடார் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது. இதன் காரணமாக விமானத்தை இயக்கிய 60 வயது விமானி, கடற்கரையில் தரையிறக்கினார்,” என்று அமெரிக்க வான்வழி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Readmore: கூகுள் பணியாளர்களை நியமித்த ஆப்பிள் நிறுவனம்!… அம்பலமான ரகசியம்!… திட்டம் என்ன?