fbpx

yarn: அதிர்ச்சி!… அதிரடியாக உயர்த்தப்பட்ட நூல் விலை!… கிலோவுக்கு எவ்வளவு தெரியுமா?… ஜவுளித் தொழில் கடும் பாதிப்பு!

yarn: நூல் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் ஜவுளித் தொழில் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு மாதத்துக்கான முதல் 2 வாரங்களுக்கான நூல் விலையை நூற்பாலைகள் கடந்த மார்ச் 1-ம் தேதி அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து நேற்று மீண்டும் நூற்பாலைகள் நூல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தியிருப்பது தொழில் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: பஞ்சு, நூல் விலைஉயர்வால் ஜவுளித் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.

பருத்தியை பதுக்கிவைத்து, செயற்கையாக விலையை உயர்த்துகின்றனர். பருத்தி விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஜவுளித் தொழில் துறை சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், உண்மை நிலையை ஆட்சியாளர்கள் உணரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Readmore: இன்னும் 3 நாட்கள் பொறுத்திருங்கள்!… அறிவிப்பு வெளியாகும்!… Annamalai விளக்கம்!

Kokila

Next Post

ADMK கொடி மற்றும் சின்னம்!... ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு!

Sun Mar 17 , 2024
ADMK: அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது […]

You May Like