fbpx

அதிர்ச்சி..!! ஹஜ் பயணத்தில் 68 இந்தியர்கள் மரணம்..!! மொத்த எண்ணிக்கை 645ஆக உயர்வு..!!

மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது.

ஹஜ் பயணத்தின்போது 68 இந்தியர்கள் இறந்ததாக சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “சுமார் 68 பேர் இறந்ததை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். பயணிகளில் பலர் மூத்த குடிமக்களாக இருந்த நிலையில், அவர்களில் சிலர் சிலர் இயற்கையான காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்ததாக நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ் பயணத்தின்போது, நடப்பாண்டில் மட்டும் 550 இறப்புகள் பதிவாகியுள்ளதாக முன்னதாக இரண்டு அரபு தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அங்கு வீசும் வெப்ப அலை கூட்ட நெரிசல் மற்றும் வயது மூப்பு காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளதாக AFP நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில், 323 எகிப்தியர்களும் 60 ஜோர்டானியர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்..!! மேலும் ஒரு பெண் வியாபாரி கைது..!!

English Summary

The death toll of Haj pilgrims due to heat wave in Mecca has risen to 645.

Chella

Next Post

’மீண்டும் இப்படி ஒரு சம்பவமா’..? தமிழ்நாடு அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்..!!

Thu Jun 20 , 2024
Tamil Nadu Victory Kazhagam president Vijay has condemned the Tamil Nadu government regarding the Kallakurichi Kallacharaya incident.

You May Like