fbpx

அதிர்ச்சி..!! தேர்வெழுத சென்ற 9ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்..!! தொடரும் சோகம்..!!

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு தற்போது இளம் வயதினைரையும் பாதித்து வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. பள்ளிகளில் விளையாடும் போது அல்லது படிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவி சாக்‌ஷ் ரஜோசரா என்றும், அவர் ராஜ்கோட் மாவட்டத்தின் ஜாஸ்டன் தாலுகாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சாந்தபா கஜேரா பள்ளியில் படித்து வந்த அவர் நேற்று காலை தேர்வறைக்குள் நுழையும் போது மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறப்பின் காரணம் குறித்து கண்டறிய மாணவியின் உடல், உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. கடந்த சில மாதங்களாக குஜராத்தில், குறிப்பாக ராஜ்கோட்டில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருவது பெற்றோர் மத்தியில் பீதியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பெண்களே உஷார்..!! இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க பேசும் இளைஞர்..!! சிக்கினால் என்ன ஆகும் தெரியுமா..?

Sat Nov 4 , 2023
சமூக வலைதளத்தில் எந்த அளவுக்கு நன்மை இருகிறதோ, கவனமாக இல்லையென்றால் அதே அளவுக்கு தீங்கும் இருக்கிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் நிகழ்வே காரணம். அந்தவகையில், நெல்லை சுற்றுவட்டார பெண்களை குறிவைத்து இஸ்டாவில் மயக்கி வாழ்க்கையை சீரழித்த சுந்தரம் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

You May Like