வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டையில் இருந்து 2 வேன்களில் சுற்றுலா சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே வந்து கொண்டிருந்த போது, ஒரு வேன் பழுதடைந்து விட்டது. இதனால், சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயம், அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்த வேனின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், வேனுக்குள் அமர்ந்திருந்த 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூர் காவல்துறையின,ர் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் களமிறங்கியுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.