தஞ்சையில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் சம்பவங்களை தடுக்க அரசு மற்றும் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இவை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், தஞ்சையில் மீண்டும் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பூதலூரில் பெண் ஒருவர் பேருந்தை விட்டு இறங்கி நடந்த சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த பெண்ணிற்கு லிஃப்ட் கொடுப்பது போல் பேசி, தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். யாரிம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை அங்கு வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பாப்பாநாடு அருகே இளம் பெண் ஒருவர் காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.