fbpx

அதிர்ச்சி..!! ’அயலான்’ திரைப்பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு..!!

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’ தான். ‘அயலான்’ இதுவரை உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அயலான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர். ராஜேஷ்-க்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். இதுவரை அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள்..!! உடனே இந்த பட்டியலை தயார் பண்ணுங்க..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

Sat Jan 27 , 2024
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களின் பணிவரன்முறை கருத்துரு பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ”பள்ளிக்கல்வியில் 2019 ஜனவரி 1ஆம் தேதி முன்னுரிமை அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் தகுதியான முதுநிலை […]

You May Like