fbpx

அதிர்ச்சி..!! ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்..!! விவரங்கள் உள்ளே..!!

ஆன்லைனில் யுபிஐ மூலம் ரூ.2,000க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆன்லைனில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் ரூ.2,000-க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1 முதல் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், என்பிசிஐ (National payments corporation of india) இதுபற்றி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

  • சிறிய கடைகளில் ரூ.2,000க்கும் அதிகமான தொகை பணப்பரிமாற்றம் செய்தால் 1.1% கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு, ரயில்வே பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்டை, ரியல் எஸ்டேட் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெட்ரோல், டீசல் உபயோகத்திற்கான பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயமானது ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட விலையை மதிப்பாய்வு செய்வதாக என்பிசிஐ (National payments corporation of india) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் நடித்துள்ள யோகி பாபு..!! வெளியான ஃபோட்டோ..!! வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

Wed Mar 29 , 2023
தமிழ் திரையுலகில் தற்போது டாப் நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர், நகைச்சுவை மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பொம்மை நாயகி எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், மண்டேலா படம் யோகி பாபுவை ஒரு ஹீரோவாகவே மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. ஒரு படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 10 லட்சம் என […]

You May Like