முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு கடும் இருமல் பாதிப்பும் உள்ளது. இதனால் முதல்வர் முழுமையாக ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் நேற்று அவர் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை Madras ENT Research Foundation மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.