இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் நஹால் படைப்பிரிவின் தளபதி ஜொனாதன் ஸ்டெய்ன்பெர்க் என்பவர் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய படைப்பிரிவான நஹாலின் கட்டளை தளபதி கர்னல் ஜொனாதன் ஸ்டெய்ன்பெர்க் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையே உள்ள முள்கம்பி வேலி எல்லையை கடந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேலில் பலம்வாய்ந்த உளவுப்பிரிவான மொஸாட் பலவீனப்பட்டிருப்பதையே இந்த தாக்குதல் சம்பவம் காட்டுவதாக போரியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ராணுவ அதிகாரி உறுதி செய்துள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இடம், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ மையமாக செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே மேலும் தாக்குதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் நஹால் படைப்பிரிவின் தளபதி ஜொனாதன் ஸ்டெய்ன்பெர்க் உயிரிழந்த விவகாரத்தில் இஸ்ரேல் கடும் அதிர்ச்சியில் உள்ளது.