fbpx

காரில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்!… மதுவுக்கு அடிமையான அவலம்!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் காரில் இருந்து பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் வினோத் தாமஸ். கேரளாவை சேர்ந்த இவர், அய்யப்பனும் கோஷியும், நாதொலி ஒரு சிறிய மீனல்ல உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், நேற்று காலை கோட்டயத்தில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடித்த நிலையில் வீட்டிற்கு திரும்ப எண்ணிய அவர், தன் காரில் ஏறியதும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மதுபான விடுதியில் நீண்ட நேரமாக நின்ற காரில், ஒருவர் இருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், வினோத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இவரது மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், பிரபலமான நடிகர் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

"இந்தியா உலகக் கோப்பையை வென்றால், 100 கோடி ரூபாய் பரிசு…": அள்ளிக்கொடுக்கும் அஸ்ட்ரோ டாக் சிஇஓ..!

Sun Nov 19 , 2023
இன்று (நவ. 19) நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தனது யூஸர்களுக்கு ரூ.100 கோடி பரிசை பகிர்ந்தளிப்பேன் என்று அஸ்ட்ரோ டாக் (Astrotalk) நிறுவனத்தின் தலைவர் புனித் குப்தா அதிரடியாக அறிவித்துள்ளார். அஸ்ட்ரோ டாக் (Astrotalk) என்பது இந்தியாவின் மிகப் பிரபலமான ஜோதிடர்களை உள்ளடக்கிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் வலைதளத்தில் சென்று யார் வேண்டுமானாலும் தங்கள் பிரச்சினைகளை கூறி ஜோதிடர்களிடம் தீர்வு கேட்கலாம். தற்போது […]

You May Like