fbpx

அதிர்ச்சி..!! யூடியூபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!! என்ன காரணம்..?

கேரளாவில் யூடியூப் சேனல் நடத்தி அதிக வருமானம் ஈட்டியவர்கள் அதற்கு உரிய வரியை செலுத்தவில்லை என வருமானவரித்துறை கவனத்துக்குச் சென்றுள்ளது. இதையடுத்து, கேரளாவில் யூடியூபர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நடிகையும், தொகுப்பாளினியுமான பேளிமாணி, ஷெபின், அர்ஜ்யூ, கால்மீ ஷஸ்ஸாம், ஜெயராஜ் ஜி நாத், அகில் என்.ஆர்.டி, எம்4 டெக், அன்பாக்ஸிங் நியூஸ், ரைஸிங் ஸ்டார், ஈகிள் கேமிங், காஸ்ட்ரோ கேமிங் உள்ளிட்ட யூடியூப் சேனல் நடத்துபவர்களின் வீடுகளில் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனையில் யூடியூபர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் பல யூடியூபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வருவாய் வருவதாகவும், ஆனால் அவர்கள் முறையாக வரி செலுத்துவது இல்லை எனவும் இதனை ஆவணங்கள் அடிப்படையில் வருமானவரித்துறை காண்டுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

யூடியூபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது யூடியூபர்களின் சொத்துக்கள், டெப்பாசிட்டுகள் உள்ளிட்டவைகள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையால் யூடியூப் சேனல் நடத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Chella

Next Post

நீதிபதிகளே..!! இனி யாரும் இப்படி செய்யாதீங்க..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Sun Jun 25 , 2023
உயர்நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும் போது, சால்வை, நினைவு பரிசுகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. குற்றவியல் நீதிமன்றங்கள், குடும்ப நீதிமன்றங்கள் என்ற வகையில் மாவட்ட வாரியாகவும், தாலுகா வாரியாகவும் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்ட நீதிபதியாக பணியில் சேரும் ஒருவர் பணி மூப்பின் காரணமாக ஐகோர்ட் நீதிபதியாகவும் பதவி உயர்வு […]

You May Like