fbpx

அதிர்ச்சி..!! ஒரு லட்சம் வீரர்களை குவித்த இஸ்ரேல்..!! உத்தரவு வந்தவுடன் தரைவழி தாக்குதல்..!!

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர், இஸ்ரேலின் டெல் அவி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, போர் பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். தொடர்ந்து, காசா நகரில் ஏவுகணை மற்றும் டிரோன் குண்டுகளை வீசி இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், பாலஸ்தீன பகுதியின் காசா முனை எல்லையில் இஸ்ரேல் தனது ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ளது. இதன் மூலம் காசா மீது மேலும் ஒரு தாக்குதலினை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள், கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில் தான், காசா எல்லையில் இராணுவ தாங்கிகள், ஆயுதங்களுடன் ஒரு லட்சம் இஸ்ரேலிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் விரைவில் காசா மீது தரைவழி தாக்குதல்களை நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்துக்கு முன்னதாக காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த தயாராகி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

அடுத்த போட்டியிலும் இவர் இல்லையா..? சுப்மன் கில்லை தனிமையில் விட்டுச் சென்ற இந்திய வீரர்கள்..!!

Mon Oct 9 , 2023
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியா, 200 ரன்களை துரத்தியபோது, முதல் 2 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்நேரத்தில் விராட் கோலி உடன் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, இறுதிவரை களத்தில் நின்று 115 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு வெற்றியையும் தேடி தந்து அசத்தினார் கே.எல்.ராகுல். விராட் […]

You May Like