பிரபல மூளை, நரம்பியல் மருத்துவரும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவருமான டாக்டர் நாகராஜன் காலமானார்.
மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன், அக்டோபர் 22ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை ஆற்றல்சார் பேராசிரியராகவும், கர்நாடகாவின் பெங்களூரு தேசிய மனநல அகாடமி உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.
மேலும், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி நெறிமுறை குழு தலைவராகவும், ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மா’வின் இயக்குனர் தேர்வு கமிட்டி தலைவராகவும் டாக்டர் நாகராஜன் செயல்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.