fbpx

அதிர்ச்சி..!! இனி 25% கூடுதல் மின்கட்டணம் வசூல்..!! மின்சார வாரியம் எடுத்த திடீர் முடிவு..!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு ஜூன் மாதத்திற்கு பிறகு மின்கட்டணம் 25% கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் நோக்கில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக 6 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை அரசு மாற்றியமைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான சிறுகுறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

எம்.எஸ்.எம்.இ என்று அழைக்கப்படும் இந்த சிறு குறு தொழில் நிறுவனங்களில் அதிகளவில் மின்சாரம் பயன்பாடு இருந்து வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது . இதனால் இந்த நிறுவனங்களை ஜூன் மாதத்திற்கு பிறகு எலக்ட்ரானிக் மின் மீட்டரை ஸ்மார்ட் மின் மீட்டராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டும் கூடுதலாக 25% மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

”சமூகத்தில் நன்மதிப்பில் உள்ளவர்களை தேடும் விஜய்”..!! யார் யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் தெரியுமா..?

Fri Feb 2 , 2024
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதன் பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு செயலி நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட […]

You May Like