‘பவர் ரேஞ்சர்ஸ்’ புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49.
குழந்தைகளின் நட்சத்திர உலகில் விரும்பி பார்க்கப்படும் கேரக்டர்களில் ’பவர் ரேஞ்சர்ஸ்’ ஒன்று. பல வண்ணங்களில் ரேஞ்சர்கள் உண்டு என்ற போதிலும் பெரும்பாலான குழந்தைகளில் ஒரே சாய்ஸ் க்ரீன் ரேஞ்சர் தான். க்ரீன் ரேஞ்சராக தோன்றி குழந்தைகளை குஷிப்படுத்தியவர் ‘பவர் ரேஞ்சர்ஸ்’ புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க். இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேசன் டேவிட்டிற்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என பிரபலங்கள் பலர் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். அவரை இழந்து துயரில் தவிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு திரையுலக நண்பர்கள், பிரபலங்கள் அவர்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அவர்களின் பிரைவசியில் தலையீடு இருக்கக் கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜேசன் டேவிட் 993 முதல் 1996 வரை ‘மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரில் ஃபிராங்க், டாமி ஆலிவராக தொடர்ந்து 124 எபிசோடுகளில் நடித்து குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தவர். இவர் டேக்வாண்டோ, கராத்தே போன்ற தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர். தொழில்முறை தற்காப்பு கலை போட்டிகளில் கலந்து பரிசுகளையும் வென்றவர்.