fbpx

அதிர்ச்சி..!! ’மேதகு’ திரைப்படத்தின் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

28 வயதான இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் இன்று காலமானார்.

’இராக்கதன்’, ’மேதகு’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் பிரவீன்குமார். உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானார். 28 வயதில் இவர் காலமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானர். இவருக்கு மஞ்சள் காமாலை தொற்று இருந்த நிலையில், அதனை சரிவர கவனிக்காததால், மஞ்சள் காமாலை நோய் தீவிரம் அடைந்து காலமானர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.

Read More : இந்த விஷயங்களை மருத்துவர் உங்களிடம் சொல்லவே மாட்டார்..!! நீங்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்..!!

Chella

Next Post

சொத்தை எழுதி தராத தாய்க்கு Current Shock..!! மீண்டும் மறுத்ததால் இரும்பு ராடால் அடித்துக் கொலை..!!

Thu May 2 , 2024
ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக். இவரது தந்தையின் முதல் மனைவியான லட்சுமி பாய், சொந்த மகன் போல தத்து நாயக்கை சிறுவயது முதலேயே வளர்த்து வந்துள்ளார். சரியான வேலை இல்லாத தத்து நாயக், வீட்டினை தனக்கு எழுதி வைக்குமாறு தாய் லட்சுமி பாயை தொல்லை செய்து வந்துள்ளார். ஒரு […]

You May Like