fbpx

அதிர்ச்சி..!! ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்..!! மக்கள் மன்ற நிர்வாகி..!! வி.எம்.சுதாகர் காலமானார்..!!

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்தவர் வி.எம்.சுதாகர். இவர் ரஜினியின் தீவிர ரசிகர், அவரது நெருங்கிய நண்பரும் கூட. இவர் கடந்த மாதங்களாக சிறுநீராக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது சிகிச்சைக்கு ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை என்ற தகவல் கூட சமூக வலைதளங்களில் பரவியியது. இதற்கு, உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார். அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று சுதாகர் அப்போது கூறியிருந்தார்.

அதிர்ச்சி..!! ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்..!! மக்கள் மன்ற நிர்வாகி..!! வி.எம்.சுதாகர் காலமானார்..!!

ரஜினி மக்கள் இயக்கத்தை பல ஆண்டுகளாக கவனித்து வந்தவர். ரஜினி அரசியலில் கால்பதிப்பர் என்று தொடங்கி, ரசிகர்கள் சந்திப்பை முன்னின்று நடத்தியவர். ரஜினியின் அரசியல் நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ தகவல்களை சுதாகர் தரப்பில் இருந்தது தான் வெளிவரும். பல்வேறு நிர்வாகிகள் நீக்கம் உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புக்கள் சுதாகரின் கையப்பம் பெற்றே வெளிவரும். அப்போது ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார் சுதாகர்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் சுதாகர் இன்று காலை காலமானார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யப் போறீங்களா? இது கொஞ்சம் படிச்சுப்பாருங்க.!

Fri Jan 6 , 2023
நாம் ஷாப்பிங் செய்யும் முறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி விட்டது ஆன்லைன் ஷாப்பிங்.இணையக்கடைகளில் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே பொருட்களை வாங்குவது என்பது நிறைய உபயோகமாக இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கின் நன்மைகள் தீமைகள் பற்றி சற்று அலசுவோம். நன்மைகள்: நமக்கு மட்டுமே பிடிச்சப் பொருளை யாரின் உதவியும் இல்லாமல் எந்த நேரமானாலும் ஆர்டர் செய்து குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும். நாம் கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்கும் பொழுது […]
ஆன்லைன்

You May Like