fbpx

அதிர்ச்சி..!! SETC பேருந்துகளில் விரைவில் கட்டணம் உயர்வு..? ஆனால், ஒரு குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு முடிவு..!!

தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளில் விரைவில் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் SETC எனும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பயண தூரத்துக்கு ஏற்ப கட்டணம் மறுநிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பார்த்தால் அரசு விரைவு பேருந்துகளில் குறைந்தது ரூ.10 முதல் விரைவு பேருந்துகளில் குறைந்தது ரூ.10 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் தென்மாவட்ட மக்களுக்கான டிக்கெட் கட்டணம் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கி வருகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால், பயண தூரம் என்பது குறைந்துள்ளது. இதனால் தென்மாவட்ட அரசு பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Fri Jan 19 , 2024
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. பிறகு அப்டியே படிப்படியாக சில மாவட்டங்களில் கனமழை குறைந்தது. இந்நிலையில், இன்று தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 […]

You May Like