fbpx

அதிர்ச்சி..!! காலாண்டு தேர்வில் 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வினாத்தாள்..!!

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பாடப்புத்தகங்களை பயன்படுத்தாமல், பயிற்சி புத்தகங்கள் மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப். 19ஆம் தேதியில் இருந்து முதல் பருவத் தேர்வை இணையவழியாக நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென 1 முதல் 3ஆம் வகுப்பு வரை மட்டும் இணையவழியாக நடத்தவும், 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 20ஆம் தேதியிலிருந்து வினாத்தாள் மூலம் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. அதற்கான வினாத்தாள்கள் ஆன்லைன் செயலி மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், செப். 20-ம் தேதி ‘சர்வர்’ பிரச்சனையால் 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில், நேற்று தமிழ் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இரு வகுப்புகளுக்குமே அதாவது 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைத்தனர். அவர்களை தேர்வையும் சரியாக எழுதவில்லை. வெவ்வேறு பாடத்திட்டங்களை நடத்திவிட்டு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கியதால் மாணவர்களின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே பாடப்புத்தகங்கள் இல்லாமல் பயிற்சி புத்தகம் மூலம் பாடங்கள் எடுப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 4, 5ஆம் வகுப்புகளுக்கு வினாத்தாள்களை ஒரே மாதிரியாக வழங்கியதால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Chella

Next Post

கவனம்...! மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க போறீங்களா...? இதை மட்டும் செய்யாதீங்க...

Fri Sep 22 , 2023
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு , அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்த 1.65 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலைகுறித்தகுறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு […]

You May Like