நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராஜ் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், செல்வராஜுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத் திண்றல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.