தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் இருதய ரத்த நாளத்தில் அடைப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவருக்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் நிலையை மருத்துக்குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சந்திக்க மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.