fbpx

அதிர்ச்சி..!! அனைத்து வாகனங்களுக்கு வரி உயர்வு..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்தி பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த வகையில், சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள், கட்டுமான வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ‘கேப்’கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, 1 லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில், அதன் விலையில் 10 சதவீதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது. பழைய மோட்டார் சைக்கிள்களில் ஒரு ஆண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25% (ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவை) மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டவற்றுக்கு 10.25 சதவீதம். 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் பழையதாக உள்ளதற்கு (ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவை) 8 சதவீதம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டவற்றுக்கு 10 சதவீதம் என வாழ்நாள் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஓராண்டு முதல் 11 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8% முதல் 18.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுறது. மேலும், 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750 ஆகும். மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 என நிர்ணயம்.

சரக்கு வாகனங்களில், சரக்கு ஏற்றிய பிறகு 3,000 கிலோ எடை கொண்ட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 3 ஆயிரம் கிலோ – 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425, முதல் ரூ.3,100 வரை எடைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. வாடகைக்கு இயக்கப்படும், பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில், சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான (ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நீங்கலாக 35 பேர்கள் பயணிக்கும் கொள்ளளவு கொண்ட வாகனம்) காலாண்டு வரி ரூ.4,900. 35 நபர்களுக்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம், படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வரி நிர்ணயம்.

இழுவை வண்டிகளுக்கு (டிரெய்லர்) ஏற்றப்படும் எடையின் கொள்ளளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப் பகுதிகளில் பிரத்யேகமாக இயக்க அனுமதிக்கப்பட்ட பஸ்களுக்கு மேல்வரி விதிக்கப்படுகிறது. எடையேற்றப்பட்ட நிலையில், 600 கிலோவுக்கு மிகாத, 50 சிசி உள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.135 முதல் ரூ.240 வரை அவற்றின் சி.சி.க்கு ஏற்ப ஆண்டு வரி விதிப்பு. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு (ஓட்டுனர் அடங்கலாக 4 பேர் பயணிக்கும் வாகனங்கள்) 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்படுகிறது.

கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ. 15 ஆயிரம். மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பேருந்துகளுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45. பணியாளர்களின் போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

Chella

Next Post

மோசடி பத்திரம்..!! புதிய உத்தரவை பிறப்பித்தது பத்திரப்பதிவுத்துறை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Fri Oct 13 , 2023
மோசடி பத்திரம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளரை ஏமாற்றி சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்தால் அதுதான் மோசடி பத்திரம். போலியாக ஒரு உரிமை ஆவணத்தை உருவாக்கி, அதை அடிப்படையாக கொண்டு ஒரு சொத்துரிமையை மாற்றம் செய்தால், அந்த பத்திரமும் மோசடி பத்திரமாகும். இப்படி ஆள்மாறாட்டம், மோசடி காரணங்களுக்காகவே கடந்த 2021இல் தமிழ்நாடு அரசு பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை […]

You May Like