fbpx

அதிர்ச்சி..!! வீட்டு உபயோக பொருட்களின் விலை அதிரடியாக உயருகிறது..!! ஏன்..? என்ன காரணம்..?

உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், வீட்டு உபயோக பொருட்களின் விலையை உயர்த்த நுகர்பொருள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதன்படி, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பால் பொருட்கள், ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோவேவ் ஓவன் (microwave oven) உள்ளிட்ட சாதனங்களின் விலை உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மூலப்பொருட்களின் விலை உயர்வால் குறிப்பிட்ட சில பாக்கெட் பொருட்களின் விலையை இரண்டரை முதல் 3% வரை உயர்த்த இருப்பதாக பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி..!! வீட்டு உபயோக பொருட்களின் விலை அதிரடியாக உயருகிறது..!! ஏன்..? என்ன காரணம்..?

இறக்குமதி செய்யப்பட்ட துணிகள், அழகு சாதனப் பொருட்கள், மதுபானங்களின் விலை 8 முதல் 10 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் பால் விலை உயர்வால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வோல்டாஸ் நிறுவன ஏசியின் விலை ஜூன் மாதம் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவையும் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. அதேவேளையில், இந்த விலை உயர்வு பொருட்கள் நுகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், ஏப்ரல் – ஜூன் மாத காலாண்டில் கிராமப்புற சந்தைகள் மீள வாய்ப்பிருப்பதாகவும் நுகர்பொருள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Chella

Next Post

லாக் டவுனில் "லூடோ"வில் காதல்! பாகிஸ்தான் ஜோடியை பிரித்த பெங்களூர் காவல்துறை!

Thu Feb 23 , 2023
பாகிஸ்தானை சார்ந்த இக்ரா ஜீவானியும் உத்திர பிரதேசம் மாநிலம் பிரக்யா ராஜை சார்ந்த முழாயம் சிங் யாதவ் என்பவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று நிலவிய சமயத்தில் லூடோ விளையாட்டின் மூலம் பலக ஆரம்பித்து ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இந்த ஜோடி பெங்களூருவில் வசித்து வந்திருக்கிறது. தற்போது இக்ரா காவல்துறையினரால் மீட்கப்பட்டு பாகிஸ்தானிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவரது கணவர் முலாயம் […]

You May Like