மணப்பாறையில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் பள்ளி தாளாளரின் கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியையை போலீசார் வலைவீடி தேடி வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தனியார் பள்ளியை சூறையாடி, அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொருக்கினர்.
இந்நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியயை, மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி சரணடைந்ததை அடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சமீப காலமாகவே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.