பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று சாக்கடையில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று (பிப்ரவரி 18) காலை 8 மணியளவில் ஃபரிக்கோட் – கோட்கபுரா சாலையில் 36 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று அமிர்தசரஸுக்குச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது பேருந்து மோதியுள்ளது. இதில், 10 அடி உயரப் பாலத்தில் இருந்து கால்வாயில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஃபரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் 2 பேர் அமிர்தசரஸில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் விபத்தில் ஒரு கையை இழந்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : ’இதுல எதுக்கு அரசியல் பண்றீங்க’.!! ’உங்களுக்கு இதே வேலையா போச்சு’..!! திமுக அரசை கடுமையாக சாடிய சசிகலா