இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு மக்கள் இணையதள சேவைகளை பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன்களின் வருகையே முக்கிய காரணமாகும். இதனால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, பயம் , கவலை மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற மனரீதியான பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.. ஆன்லைன் கேம், யூ டியூப் வீடியோ, சமூக வலைதளங்கள் என அதிக நேரம் குழந்தைகள் செல்போனொல் செலவழிக்கின்றனர்
செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதாகவும், அவர்கள் யாரிடமும் பேசுவதில்லை என்றும், முடிந்த வரை குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிக ஸ்க்ரீட் டைமால் மூளை ஒரு நேரத்தில் பல விஷயங்களை யோசிக்கிறது. மூளை, இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிக போன் உபயோகத்தால் அடிக்கடி Mood Swings மாறிவிடுகிறது அதிகமாக மொபைல் பயன்பாட்டாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அதிகம் மொபைல் உபயோகிக்கும் குழந்தைகள் முரட்டுத்தனமாக வளர்வதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இளைய தலைமுறையில் பலர் இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மொபைல் தான். தேவைக்கு மட்டும் உபயோகித்து படிப்படியாக அதன் பயன்பாட்டை குறைப்பது நல்லது.